மதுராந்தகம் -தாராபுரம் 2 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்று வருகிறது..
மதுராந்தகம் -தாராபுரம் 2 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்று வருகிறது.. தாராபுரத்தில் அதிமுக ஆரம்பத்தில் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்து திமுக 15 வது சுற்று வரை இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்கிற நிலை தொடர்ந்து தமிழக அரசியலில் நிலவி வருகின்ற சூழலில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் நிரூபித்துள்ளன. பொதுவாக மக்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்திருக்கின்றதோ அந்த கட்சி வேட்பாளரையே இடைத்தேர்தலின் பொழுது ஆதரிப்பர் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதில் சில நேரங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஆனால் வெற்றி என்பது ஆளுங்கட்சியைச் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது; இருந்து வருகின்றது. அந்த வகையில் இரண்டரை ஆண்டுக்குள் ஆளுங்கட்ச்சியாக மாறிய தமிழக வெற்றி கழகம் இந்த இடைத்தேர்தலையும் தனக்குரியதாக மாற்றி வடிவமைத்து இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுகவும் இரண்டாம் இடத்தில் வலுவான நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு களம் கண்ட திமுக இந்த இடைத்தேர்தலில் தனித்து நின்று வாக்குகளை கணிசமாக பெற்று வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுகவும் கணிசமான வாக்குகளை தனித்த நிலையில் பெற்றிருக்கிறது என்பது கவனத்திற்குரியது. ஆக தமிழக அரசியல் களம் என்பது மூன்று கட்சிகள் மட்டுமே பிரதானம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
Tags :


















