ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிஸா கடற்கரைகளில் அர்னாப்புயல் கரையைக் கடந்தது

by Admin / 30-10-2026 02:15:29pm
ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிஸா கடற்கரைகளில் அர்னாப்புயல் கரையைக் கடந்தது

ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிஸா கடற்கரைகளில் அர்னாப்புயல் கரையைக் கடந்தது. புயலின் காரணமாக மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 பூட்டானின் பனிஆற்று ஏரி உடைந்ததை தொடர்ந்து  வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்கள் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன .

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று இரவு 11:51 க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி எஸ் எல் வி எப் 18 ராக்கெட் மூலம் என் வி எஸ் 03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

 இந்தியாவில் 27. ஒரு சதவீதத்திலிருந்து வறுமை 2.6 சதவீதமாக குறைந்து உள்ளதாக உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. வறுமையில் வாழும் 57 சதவீத தின பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் 2027 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டு பொருளாதாரம் வளர்ச்சி மிகவும் 7.35% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் , இந்திய தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்காளர் பட்டியலில் இருந்து பெருவளவில் வாக்காளர்கள் நீக்கப்படுவது தொடர்பான மனுக்கள் குறித்தும் வாக்காளர் உரிமை கோரல் படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும் பரிசீலிக்க கோரிக்கை வைத்துள்ளது.

 டெல்லி ராம் லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பாக பேரணி நடைபெற உள்ள நிலையில் வர்த்தக சங்கத்தினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரணி நடத்தினால் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான பண்டிகை கால வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் பேரணியை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக ரயில் சேவைகளை அனைத்து வழித்தடங்களிலும் இன்று நள்ளிரவு வரை நீடித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo