தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான புதிய வயது வரம்பு அக்டோபர் 30 ,2026முதல் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் உத்தரவு
தமிழக முதலமைச்சர் விஜய் தமிழக அரசு பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்ச வரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி உத்தரவு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான புதிய வயது வரம்பு அக்டோபர் 30 ,2026முதல் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இந்த உத்தரவு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகள் மற்றும் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு பரிசீலித்து இந்த முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப்-1பொது பிரிவில் 32 வயதிலிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவின்கள் உள்ள பி சி பி சி எம் எம் பி சி டி என் சி எஸ் சி எஸ் டி உள்ளிட்டோருக்கு 37 இருந்து 42 ஆகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவில் 42 இருந்து 47 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 லிருந்து 52 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. குரூப்2, 2ஏ ஏ பொது பிரிவில் 30 லிருந்து 35 ஆகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40 இல் இருந்து 45 ஆகவும் உயர்த்தி உள்ளது. இட ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு உயர்த்தப்படவில்லை. குரூப் 4 இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை அத்துடன் பொது பிரிவினருக்கு 30 இருந்து 35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான அரசு பணி தேர்வர் களுக்கு ஒரு மறு வாய்ப்பு உருவாகி உள்ளது.
Tags :

















