அமெரிக்க இடைக்காலத் தேர்தல்- ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்-2026, முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து தேர்தல் முடிவுகள்- முன்னிலைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி முக்கிய வெற்றிகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
வடக்கு கரோலினா தேர்தலின் மிக முக்கிய திருப்புமுனையாக, குடியரசுக் கட்சியின் வசம் இருந்த செனட் இடத்தை ஜனநாயகக் கட்சியின் ராய் கூப்பர் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஜார்ஜியாவில் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய செனட்டர் ஜான் ஒசாஃப் மீண்டும் வெற்றி பெற்று தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
விர்ஜீனியாவில்ஜனநாயகக் கட்சியின் மார்க் வார்னர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
டெக்சாஸில் குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் டெக்சாஸில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 37 வயதான ஜேம்ஸ் டலாரிகோஅதிபர் டிரம்ப் ஆதரித்த கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
புளோரிடாவில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக, இம்மாநிலத்தின் செனட் சிறப்புத் தேர்தலில் ஆஷ்லே மூடி வெற்றி பெற்றுள்ளார்.
ஆரம்பகட்ட நிலவரங்களின்படி, பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றும் நோக்கில் வலுவான முன்னிலை
நியூயார்க் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக ஜனநாயகக் கட்சியின் லெட்டிஷியா ஜேம்ஸ்மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விர்ஜீனியாவில் சுஹாஸ் சுப்பிரமணியம் மற்றும் புளோரிடாவில் பியா டாண்டியா ஆகிய இந்திய வம்சாவளியினர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தபால் வாக்குகள் மற்றும் முன்கூட்டியே செலுத்தப்பட்ட பல மில்லியன் வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழுமையான இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் ஆகலாம்.
வேகமாக எண்ணப்படும் மாகாணங்கள்: ஜார்ஜியா, தென் கரோலினா, விர்ஜினியா, ஓஹியோ மற்றும் வட கரோலினா போன்ற மாகாணங்கள் தங்களின் வாக்கு எண்ணிக்கையை மிக விரைவாக முடிக்கும் வழக்கம் கொண்டவை. ஓஹியோ போன்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த சில நிமிடங்களிலேயே தபால் வாக்கு முடிவுகள் வெளியாகத் தொடங்குகின்றன.
கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் போன்ற மாகாணங்களில் பெருமளவு வாக்குகள் தபால் மூலம்செலுத்தப்படுவதால், அங்கு முழுமையான முடிவுகள் வெளியாக சில நாட்களோ அல்லது வாரங்களோ கூட ஆகலாம். அலாஸ்கா போன்ற மாகாணங்களில் தபால் வாக்குகள் வந்து சேர நவம்பர் 18 வரை அவகாசம் உள்ளது.
மிகவும் நெருக்கடியான போட்டி நிலவும் தொகுதிகளில் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை அல்லது மறுவாக்கு எண்ணிக்கை (போன்ற சூழல்கள் ஏற்பட்டால் இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட கூடுதல் நேரமாகும்
Tags :



















