கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பேராயர் விடுதலை-மேல் முறையீடு

by Editor / 14-01-2022 02:29:36pm
கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பேராயர் விடுதலை-மேல் முறையீடு

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு வழக்கில் பேராயர் பிரான்கோ முல்லக்கல் விடுதலை; பிரான்கோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பு.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக கடந்த 2018ம் ஆண்டில் புகார் கூறினார். இந்தகன்னியாஸ்திரி கூறிய குற்றச்சாட்டு கேரளமாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிராங்கோவை கைது செய்யக்கோரி அந்த மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பேராயர் முல்லக்கல் கைது செய்யப்பட்டார். அதன்பின் பிராங்கோ முல்லக்கல் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக கூறி கோட்டயம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் பாதிரியார் முல்லக்கலை விடுவித்து உத்தரவிட்டது.இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கன்னியாஸ்திரி தரப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பேராயர் விடுதலை-மேல் முறையீடு
 

Tags :

Share via