தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குடியரசு தின வாழ்த்துச்செய்தி

by Editor / 25-01-2022 01:35:38pm
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குடியரசு தின வாழ்த்துச்செய்தி

 

இந்திய குடியரசு தினம், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்நாள் ஆகும்.தமிழகம், தெலுங்கானா,புதுச்சேரி மக்களுக்கும், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய தேசியத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும்- இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகக் கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம்.

- டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்,
(தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்.)

 

Tags : Republic Day Greetings from the Governor of Telangana and the Deputy Governor of Pondicherry

Share via