2 வயது 5 மாதங்களே 2 நிமிடத்தில் 60 விதமான குரல் உலக சாதனை

by Admin / 05-02-2022 02:41:58pm
2 வயது 5 மாதங்களே 2 நிமிடத்தில் 60 விதமான குரல் உலக சாதனை

நாமக்கல் மாவட்டம் பி.குமாரபாளையம் அருகே உள்ள சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியநாயகம்- எலிசபெத் தம்பதியரின் மகள் தெல்பியா.

2 வயது 5 மாதங்களே ஆன இந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 விதமான குரல்களை எழுப்பி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 

மேலும் 155 நிழல்படங்கள் உள்ளிட்ட 500 படங்களை அடையாளம் கூறியும் சாதனை நிகழ்த்தியுள்ளார். 2 வயது குழந்தையின் இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கூறியதாவது:-
 
எங்களது குழந்தை தெல்பியா பிறந்தது முதல் சுறுசுறுப்பாக இருப்பாள். சில மாதங்களிலேயே அவளிடம் அபூர்வ திறமை இருப்பதை உணர்ந்தோம். 

நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் இப்போது கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்காலத்தில் கின்னஸ் சாதனை படைக்க செய்வதே எங்களது நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

 

Tags :

Share via