தேனி சின்னமனூரிலுள்ள பராமரிப்பில்லாத உலக புகழ் பெற்ற செப்பேடு பழமையான பூலாநந்தீசுவரர் சன்னதி

by Editor / 14-02-2022 05:58:01pm
தேனி சின்னமனூரிலுள்ள பராமரிப்பில்லாத  உலக  புகழ் பெற்ற செப்பேடு பழமையான பூலாநந்தீசுவரர் சன்னதி

உலக அளவில் வரலாற்றில் இடம் பெற்று, "செப்பேடு புகழ்" பெற்ற   கோவில்,தூங்கும் அற நிலையத் துறையால், சுகாதார சீர்கேடு, தெப்பக்குளம் குப்பை கூழமாக காட்சி,விரக்தியில் பக்தர்கள்:

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் உலக அளவில் வரலாற்றில் இடம் பெற்று, செப்பேடு புகழ் பெற்ற பழமையான பூலாநந்தீசுவரர் சன்னதியும் . இச்சன்னதியின் இடது புறம் சிவகாமி அம்மன் கோயிலும் உள்ளது. இச்சிவாலாயம் நகரின் முக்கிய வழிபாட்டு தலமாக இருந்து வருகிறது.

இந்த சிவாலயம் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தாகும். உயர்ந்த சிவத்தலம் எது? என்று கேட்ட நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூதமா முனிவர், “பதினெண் புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில் சங்கர சங்கிதையில் கூறிய சிவத்தலங்களில் சிறந்த தலம் இப்பூலாவனமாகும்” என்று சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் குறித்து பண்டைய காலத்திலேயே கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. 

நகர வியாபாரிகள், தொழிலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பக்தர்கள் இப்பிரசித்த பெற்ற சிவாலயத்தில் தரிசனம் செய்த பின்புதான் தங்களது அன்றாட வேலைகளில் ஈடுபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலின் கிழக்குப் பகுதியில் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, சிவபெருமான் உருவாக்கிய சிவகங்கைத் தீர்த்தம் எனப்படும் புகழ் வாய்ந்த தெப்பக்குளம் உள்ளது.

அறநிலையத்தின் ஆணவம் மிகுந்த மெத்தனப் போக்கினால் அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இச்சிவாலயத்துடன் கூடிய தெப்பக்குளம் தற்போது குப்பைக் கூழமாகவும்,வீரியம் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு ,இக்குளத்து நீரானது அசுத்தமாகவும், பாலீத்தீன் கழிவுகள் நிறைந்தும் இருப்பதால், சிவாலயத்திற்கு பக்தியோடு வரும் பக்தர்களுக்கு முகம் சுளிக்குமளவிற்கும் காட்சியளித்து வருகிறது.

மாசுபடிந்த சுகாதாரம் இல்லாத தெப்பக்குளத்து நீரால் சுமார் 500ற்கும் மேற்பட்ட மீன் குஞ்சகள் தற்போது வாழ்வா,சாவா என்ற நிலையில் தத்தளித்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அறநிலையத்தின் அலட்சியத்தால் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மரங்களிலிருந்து இலைகள் காய்ந்து, உதிர்ந்து குப்பை மேட்டுக் குவியலாகவும் இருந்து வருகிறது.

இது குறித்து அறநிலையத்திடம் புகார் கொடுத்த போது, தெப்பக்குளத்தை சுற்றி சுத்தமாக வைத்திருந்தால் ஒரு சிலர் ஓய்வு எடுக்க வேண்டி இவ்விடம் வந்துவிடுகிறார்கள். என புகாருக்கு சம்பந்தமே இல்லாமல் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். ஏன்,கோவில் சன்னதியில் ஓய்வு எடுக்கக் கூடாதென அறநிலையத் துறைக்கென்று புதிதாக ஏதும் சட்டம்  இயற்றப்பட்டுள்ளதா, என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

மேற்கண்ட கோவிலின் சுகாதாரக் குறைகளை சுணக்கம் இல்லாமலும், சரியான முறையிலும் அறநிலையத்தினர் நிவர்த்தி செய்திட முன்வர வேண்டும். குறிப்பாக இந்த தெப்பக்குளத்தை சுற்றி கம்பி வேலிகள் அமைத்தும் அதில் முன்பக்க கதவுகள் அமைத்து கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும். 

பொறுப்பில் உள்ள அதிகாரியால் இயலவில்லை என்றால் கோவில் திருப்பணிகளுக்கு தயாராக இருக்கும் தொழிலதிபர்கள், பக்தர்கள்,வழிபாட்டு குழுவினர் மற்றும் தொண்டு அமைப்புகள் மூலம் கோவில் சார்ந்த சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட இதர பணிகளை நிவர்த்தி செய்திட வழியாவது விட வேண்டும் என சிவகாமி அம்மனின் தீவிர பக்தர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யுங்கள் இல்லையேல் நகரினில் இனங்கண்டு பொறுப்பானவர்களிடத்தில் ஒப்படையுங்கள் என  அறநிலையத்தின் மீது ஆதங்கத்துடன் விரக்தியில் இருந்து வருகின்றனர்.

அது சமயம், பழமையான சிவாலயத்தை அனுதினமும் பராமரிப்பு செய்து பக்தர்களின் ஆதங்கத்தையும், விரக்தியையும் போக்கிட அறநிலையத் துறையினர் முன்வர வேண்டும் என 40ற்கும் மேற்பட்ட தாய் கிராமங்களை உள்வாங்கிய பூலாநந்தீசுவரர், சிவகாமி அம்மனின் பக்தர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 தகவல்:வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்

  

 

Tags :

Share via