வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இரட்டை ரயில் பாதை -ரயில் போக்குவரத்தில் மாற்றம்

by Editor / 20-02-2022 06:19:11pm
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி இரட்டை ரயில் பாதை -ரயில் போக்குவரத்தில் மாற்றம்

வள்ளியூர் - ஆரல்வாய்மொழி  ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) மற்றும் திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
2. மார்ச் 3 முதல் மார்ச் 12 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) மற்றும் மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
3. மார்ச் 6 அன்று  புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861) மற்றும் மார்ச் 7 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது  தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Valliyoor - Aralvaymozhi double track railway line

Share via