நேற்று கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று ஏறுமுகத்துடன் வர்த்தகம் தொடக்கம்

by Admin / 25-02-2022 11:10:29am
 நேற்று கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று ஏறுமுகத்துடன் வர்த்தகம் தொடக்கம்

மும்பை பங்குச்சந்ததை நேற்றும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,264 புள்ளிகள் உயர்ந்து தற்போது வர்த்தகமாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா நேற்று போரை தொடங்கியது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. 

நேற்றைய வர்த்தகம் 2,702 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் சென்செக்ஸ் குறியீட்டு எண் 54,529 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 13 லட்சத்து 44 ஆயிரம் கோடி சரிவடைந்தது.

இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் குறியீட்டு எண் 55,321.72 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது. காலை 10.30 மணி நிலவரப்படி 1,264 புள்ளிகள் உயர்ந்து 55,794.38 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

வர்த்தகத்தின் இடையே 55,299.28 புள்ளிகள் குறைந்தும், 55,984.59 உயர்ந்தும் காணப்பட்டன. இந்தியா விக்ஸ் போன்ற நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டன.
 
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், அதானி போர்ட்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ வங்கி, கோல் இந்தியா, டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகிறது.
 

 

Tags :

Share via