அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவது அதிகாரிகளின் இரண்டு கரங்களில்தான் உள்ளது.-முதல்வர்

by Editor / 12-03-2022 04:26:05pm
 அரசு திட்டங்கள்  மக்களை சென்றடைவது  அதிகாரிகளின் இரண்டு கரங்களில்தான் உள்ளது.-முதல்வர்


மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

 மூன்று நாட்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் சொல்வதாக இருந்தால் இந்த ஆட்சி சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை அதிகாரிகள் மூலமாக தான் அறிந்து கொண்டதாகவும், இந்த ஆட்சி மக்களுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வரக்கூடியதாக அமைந்துள்ளது  என்ற அடிப்படையிலேயே அதிகாரிகள் கருத்துக்கள் மூலமாக அறிந்து வருவதாகவும் அரசு உருவாக்கிய திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளது என்பதையும் அதிகாரிகளின் கருத்துக்கள்  மூலம் தெரிந்து கொண்டதாகவும், தனிப்பட்ட முறையிலும்,அரசின் சார்பிலும் அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் பொழுது அனைவரும் இணைந்து தான் இந்த அரசு என்றும் மக்கள் நம்மளை நம்பி இந்த ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இருப்பதாகவும் கடைக்கோடி மனிதனுடைய கவலையை தீர்க்கும்  அரசாக ஒரு அரசு அமைய வேண்டும் அப்படித்தான் இந்த அரசு அமைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

 மேலும் சில முக்கிய ஆலோசனைகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் தான் நினைவூட்ட கடமைப்பட்டு இருப்பதாகவும் அரசோடு முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் அதனை கட்டுப்படுத்துவது  பாராட்டுக்குரியது ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், குற்றங்களை குறைப்பது மட்டுமின்றி  குற்றங்களே இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் அனைத்து அதிகாரிகளையும்  தான் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

சாதி மோதல்கள் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரிவாக பேசியதாகவும் சாதி மோதல்களை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும் அது சமூக ஒழுங்கு பிரச்சினை என்றும், கிராமங்களில் இந்த பிரச்சனை அதிகமாகஉள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.படிக்காத இளைஞர்கள்,  படித்த இளைஞர்கள் மட்டுமல்ல படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கிற ஒரு சிலரால் இதுபோன்ற மோதல்கள் உருவாக கூடிய சூழ்நிலை உருவாகிறது, என்றும் இது போன்ற இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும்,என்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரவேண்டும் என்றும், ஆக்கபூர்வமான வழிகளில் விளையாட்டுப் போட்டிகளில் ஊர்க்காவல் படையில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறோம் என்று சொன்னதையும் தான் வரவேற்பதாகவும்,இதனைப்போன்று   மற்ற மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

 மேலும் மத மோதல்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மத மோதல்கள் குறித்து  பேசும்பொழுது கோவையில் இயங்குவதுபோல சிறப்பு பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதை  அரசு இந்த ஆலோசனை நிச்சயமாக பரிசீலிக்கும்  என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 ஒரு காலத்தில் மதம் என்பது மதம் சம்பந்தப்பட்டது மட்டுமே  இருந்தது இப்போது அது அரசியல் நோக்கங்களுக்காக சிலரால் மாற்றப்பட்டு விட்டதாகவும் எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள் இதை தடுக்க வேண்டும் என்றும், சாதி மோதல்களுக்கு பிரச்சனைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணமாக இருக்கிறது எல்லோரும் சொல்லியுள்ளபடி முழுமையான உண்மை தான் இது நவீன தொழிநுட்ப யுகம் இந்த தொழில்நுட்பத்தை நல்லதுக்கு பயன் படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தலாம் சாதி மத வக்கிரம் பிடிச்சவங்களே அறிவை பயன்படுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் இவர்களை முறையிலேயே நாம் களையெடுக்க வேண்டும் இப்படிப்பட்ட பதிவுகளை போடுகிறார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் சோசியல் மீடியா சென்டர் புதிய அலுவலகம் தேவை என்ற திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும், மத்திய அரசில் இருப்பது போன்று நேஷனல்  அனலைஸ்ட் சென்டர் சோசியல் மீடியா ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் சார்பில்  நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அச்சமில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும்  பெற்று தரும் துறையாக இல்லாமல் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கும் துறையாகவும் காவல்துறை மாற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் மத்தியில் முதல்வர் பேசும் பொழுது  தமிழகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, மக்களை தேடி மருத்துவம், நமக்கு நாமே, சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், ஆகிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆட்சியர்கள் அனைவரும் விபரங்களை  அளித்தீர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் நிர்வாக எல்லைக்குள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

 மேலும் நகராட்சிகளில் நிர்வாக அலுவலர்கள் நியமனம் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், நீர் நிலைகளை குடியிருப்போருக்கு பட்டா வழங்குவது குறித்து இங்கு பெரிய விவாதம் நடந்ததாகவும் நீர் இருந்தாலும் இல்லை என்றாலும் அது நீர் நிலை தான் என்றும், அது ஆக்கிரமிப்பு என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருப்பதாகவும், நீர்நிலைகளை பராமரிக்காத காரணத்தால் வெள்ள காலங்களில் நாம் அடையும் பாதிப்புகள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும், எனவே நீர்நிலை ஆக்கிரமிப்பு நான் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,


 நாட்டில் கல்வி சுகாதாரம் தராசின் இரு கண்கள் என்றும் சாலை வசதி மின்சாரம் உணவு பொருள் வழங்கல் ஆகியவை அடுத்த இலக்கு என்றும் இவற்றில் எந்த தடங்களும் இருக்கக் கூடாது என்றும் இதற்காகவே நாம் இருக்கிறோம் என்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் என்றும் இவை அனைத்தும் நிறைவேற்றும் பொறுப்பு உங்கள் இரண்டு கைகளுக்கு தான் இருக்கிறது என்றும், ஒவ்வொரு திட்டமும் எந்த  மாதிரி செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை நான் கூறி நீங்கள் கண்காணித்தால் போதும்  அந்தத் திட்டம் மிக சிறப்பாக செயல்பட தொடங்கிவிடும், அனைவரும் டேஷ்போர்டு உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் பணிகளைச் செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செய்த பணிகளும் இருக்கட்டும், நீங்கள் செய்யவேண்டிய பணிகளும் இருக்கட்டும், எந்த உயரத்தை அடைவதாக இருந்தாலும் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும், ஒவ்வொரு நாளும் அனைத்து  திட்டங்களை உயர்த்துவோம். அதன் மூலமாக ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் உயர்த்துவோம். எனக்கு நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பு தான்.
 உங்கள் கனவுகளை நிறைவேற்ற என்னை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்,  வளமான தமிழ்நாட்டை  அமைக்க  உங்களால் மட்டும்தான் முடியும், முன்பு இருந்ததைவிட கடந்த மூன்று நாட்கள் நான் அதிகமான உற்சாகத்தோடு இருக்கிறேன், உங்கள் ஒவ்வொருவரின்  பேச்சும் எனக்கு தன்னம்பிக்கையையும், சக்தியும் கொடுத்திருக்கிறது, ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த மூன்று நாள் மாநாடு அமைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.பின்னர் 

முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2022ஆம் ஆண்டிற்கான விருதினை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசுக்கு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.


 

 

Tags : Government programs reach the people only in the two hands of the authorities.-Chief Minister eloquent speech

Share via