வேளாண்மை  நிதி  நிலை அறிக்கை.

by Editor / 19-03-2022 01:38:09pm
வேளாண்மை  நிதி  நிலை அறிக்கை.

தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல்.

பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ₨33,007 கோடி ஒதுக்கீடு.

கடந்தாண்டு வேளாண்துறைக்கு ₨32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது.

உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவில் முதல் முறையாக மனித மூளையை முழுமையாக உயிரணு அளவில் ஆராய்ச்சி செய்வதற்கான அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வு மையம் சென்னை ஐ.ஐ.டி.யில் தொடக்கம்.

விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் 604.73 கோடி செலவில் 2750 கி.மீ நீள சாலைகள் அமைக்கப்படும்.

50 உழவர் சந்தைகளை மேம்படுத்த 15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க 10 கோடி ஒதுக்கீடு,
சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க 15 கோடி ஒதுக்கீடு .

சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

 

Tags : agri 2022

Share via