இலஞ்சி குமரன் கோவிலில் நாளை 21 ஆம் தேதி கும்பாபிஷேகம்.

by Editor / 20-03-2022 09:27:47pm
இலஞ்சி குமரன் கோவிலில் நாளை 21 ஆம் தேதி  கும்பாபிஷேகம்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் பழமையும், பெருமையும் வாய்ந்த குமாரர் கோவில் உள்ளது. 
அகஸ்தியர் வழிபட்ட இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் குறைந்தபட்சம் 10 திருமணங்களும்,அதிகபட்சம் 100க்கும்  அதிகமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இலஞ்சி குமாரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து வருகிற 21-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அன்று மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன பூஜை, பிரவேச பலி, ரசேஷேக்ண ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெட்றது..தொடர்ந்து 17-ந்தேதி முதல் 20-ந் தேதி ஐந்தாம் காலபூஜைகள் நடந்தது.  21-ந்தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஆறாம் கால பூஜை, நாமசந்தானம், ஸ்பர்சாகுதி, காலை 7.15 மணிக்கு பரிவார யாகசாலையில் பூர்ணாஹீதி, பிரதான யாகசாலையில் மகா பூர்ணயாகுதி, தீபாராதனை, உடன் கலசங்கள் புறப்பாடு, காலை 10.15 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத திருவிலஞ்சி குமாரசுவாமி திருக்கோவில் விமானங்கள்மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.மதியம் 1.15 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத திருவிலஞ்சி குமாரசுவாமி திருக்கோவில் மூலாலய மகாகும்பாபிஷேகம் உடன் மகா தீபாதாரனை, பிரசாதம் வழங்கல் நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு மகாபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.இந்த கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் திருவிலஞ்சி முருகன் ஆலயத்தின் பக்தர்களும் இலஞ்சி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

இலஞ்சி குமரன் கோவிலில் நாளை 21 ஆம் தேதி  கும்பாபிஷேகம்.
 

Tags :

Share via