ஆவின் பால் லிட்டருக்கு  ரூ.3 விலை குறைப்பு அமல்

by Editor / 16-05-2021 07:42:45pm
  ஆவின் பால் லிட்டருக்கு  ரூ.3 விலை குறைப்பு அமல்



ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது..
 முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஆவின் பால் விலை குறைக்கப்படும் அறிவிப்பும் ஒன்றாகும். இதையடுத்து கடந்த 8-ந் தேதி ஆவின் பால் விலை குறைக்கப்படுவது தொடர்பான முழு விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டதுடன், இந்த திட்டம் 16-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
அதன்படி ஆவின் பால் விலை குறைப்பு ஞாயிற்றுக்கிழமைமுதல் அமலுக்கு வருகிறது. குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை குறித்த முழு விவரம் வருமாறு:-
* ஆவின் 1 லிட்டர் நீல நிற நைஸ் பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.40-க்கு விற்பனை ஆகிறது. ½ லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.20-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் ½ லிட்டர் பச்சை நிற மேஜிக் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.22-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் ½ லிட்டர் ஆரஞ்சு நிற பிரீமியம் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.24-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் ½ லிட்டர் ரோஸ் நிற டயட் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் 1 லிட்டர் டீமேட் பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.57-க்கு விற்பனை ஆகிறது.
ஆவின் பால் அட்டை அடிப்படையில் விலை குறைப்பு பட்டியல் விவரம் வருமாறு:-
* ஆவின் 1 லிட்டர் நீல நிற நைஸ் பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.37-க்கு விற்பனை ஆகிறது. ½ லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் ½ லிட்டர் பச்சை நிற மேஜிக் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.21-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் ½ லிட்டர் ஆரஞ்சு நிற பிரீமியம் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.23-க்கு விற்பனை ஆகிறது.
* ஆவின் ½ லிட்டர் ரோஸ் நிற டயட் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18-க்கு விற்பனை ஆகிறது.
நுகர்வோருக்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை, அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும்போது ஈடு செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via