நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை யுஜிசி

by Staff / 22-03-2022 11:31:08am
 நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை யுஜிசி

மருத்துவ படிப்புக்கு ‘நீட்’  என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும்.

இந்த நிலையில் தற்போது மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்லைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது. மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
 
ஜூலை மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்க நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via