தூத்துக்குடியில் தடுப்பூசி முகாம்களில் கனிமொழி எம்.பி., திடீர் ஆய்வு

by Editor / 18-05-2021 06:14:18pm
தூத்துக்குடியில் தடுப்பூசி முகாம்களில் கனிமொழி எம்.பி., திடீர் ஆய்வு

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசு செலுத்தும் முகாம்களுக்கு கனிமொழி எம்.பி., திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் 
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை மிக தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தி.முக. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராமங்கள் முதற்கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களை நேரடியாக சந்தித்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியத்தை எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட குருவார்பட்டி, கோடாங்கிப்பட்டி, கவுண்டம்பட்டி, கோட்டூர், அயன்பொம்மையாபுரம் பகுதியில் உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களுக்கு அறிவிப்பு இல்லாமல் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via