திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்

by Staff / 06-04-2022 03:42:19pm
திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் நேற்று காலமானார்.

அல்லிநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்கிற லிட்டில் ஜான் என்பவர் ஐம்புலன் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

சுமார் 3 அடி உயரம் கொண்ட இவர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும் கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மோடமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டில் சென்று உறங்கியவர் மீண்டும் காலையில் எழுந்திருக்க வில்லை என்று உறவினர்கள் பார்த்தபோது மூக்கிலும் வாயிலும் ரத்தம் வந்த நிலையில் அவர் இருந்தார். 

உடனே உறவினர்கள்  அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via