சித்திரை விஷு பூஜை சபரிமலையில் இன்று நடை திறப்பு

by Editor / 10-04-2022 07:23:39am
சித்திரை விஷு பூஜை சபரிமலையில்  இன்று நடை திறப்பு

சபரிமலை நடை, சித்திரை விஷு பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து மூலவருக்கு விளக்கேற்றிய பின், 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லாததால், இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் துவங்கும். வரும் 15ல் விஷு கனி தரிசனம் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் காய், கனி அலங்காரத்தில் அய்யப்பனை தரிசிக்க முடியும்.வரும் 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல், வரும் 18 வரை, 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.கொரோனா தொற்று காரணாமாக சபரிமலையில் இன்னும் கட்டுப்பாடுகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories