தங்கத்தை வயிற்றில் மறைத்து கடத்த முயற்சி செய்த நபர் மருத்துவ பரிசோதனையில் சிக்கினார்.

by Staff / 24-04-2022 01:58:40pm
தங்கத்தை வயிற்றில் மறைத்து கடத்த முயற்சி செய்த நபர் மருத்துவ பரிசோதனையில் சிக்கினார்.

ஷார்ஜாவில் இருந்து ஜெய்ப்பூர் வந்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரது உடமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பைகளில் ஒன்றும் கிடைக்காத நிலையில் அவருக்கு உடற் பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனை சி.டி.ஸ்கேனில் குடல் பகுதியில், மஞ்சள் நிறத்தில் கேப்சூல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கருப்பு நிற டேப் சுற்றி இருந்த 769 கிராம் தூய தங்கத்தை மீட்ட அதிகாரிகள் நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 41.6 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via