மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

by Editor / 12-05-2022 09:38:01am
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 
11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான 18-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும்,  20-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும்,  21-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 22ஆம் தேதி தருமபுரஆதினம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  சிவிகை பல்லக்கில்   பல்லக்கில் பட்டின பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.  இப் பெருவிழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுர ஆதீன கர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபகொடி ஏற்றப்பட்டது

 

Tags : The Vaikasi festival started with the flag hoisting at Dharmapuram Aadeenam, Mayiladuthurai

Share via