132 பேரை பலி கொண்ட சீனா விமானம் விபத்துக்குள்ளானதாக கருப்பு பெட்டியின் பதிவுகளை ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

by Staff / 18-05-2022 01:52:24pm
132 பேரை பலி கொண்ட சீனா விமானம் விபத்துக்குள்ளானதாக கருப்பு பெட்டியின் பதிவுகளை ஆய்வு செய்த அமெரிக்க  நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

கடந்த மார்ச் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி 142 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய சீன விமானம் விபத்து குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானம் இறுதி கணக்கில் வேண்டுமென்று செங்குத்தாக தரையை நோக்கி செல்வதாக கண்டறிந்துள்ளனர். விமானியின் அறையில் உள்ள யாரோ கட்டளையிட அந்த விமானம் அப்படியே தரையை நோக்கி செலுத்தப்பட்டது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 90 டிகிரி கோணத்தில் அந்த விமானம் சில நிமிடங்களில் தரையில் விழுந்தது விமானத்தில் தீ பிடித்த நிலையில் அது மலைப்பகுதியில் விழுந்துவிட்டது. யாராவது பலவந்தமாக விமானியின் அறைக்குள் நுழைந்து விமானத்தை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Tags :

Share via