ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்

by Staff / 31-05-2022 04:40:14pm
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்

பழுதான இயந்திரத்தைக் கொண்டு விமானிகளுக்கு பயிற்சி அளித்ததாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதமாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விதித்தது. சிமுலேட்டர் கண்காணிப்பு சோதனையில் பழுதான இயந்திரங்களை கொண்டு போயிங் 737 விமான பைலட்டுகள் பயிற்சி அளித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.கோளாறான  இயந்திரத்தால் பயிற்சிபெற்ற 90 விமானிகளை தடை செய்து மீண்டும் பயிற்சிபெற டிஜிசிஏ  உத்தரவிட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அவதாரமாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விதித்துள்ளது.
 

 

Tags :

Share via