எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்

by Editor / 07-08-2022 06:05:22pm
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல்-மங்களூரு (வண்டி எண்:22637) இடையே மதியம் 1.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8ம் தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 40 நிமிடம் தாமதமாக மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல்-மைசூரு (12609) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை 30 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல்-ஹவுரா (12840) இடையே இரவு 7.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20ம் தேதி 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு இயக்கப்படும். நாகர்கோவில்-கச்சேகுடா (16354) இடையே காலை 9 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 13ம் தேதி, 20ம் தேதி, 27ம் தேதி மற்றும் செப்டம்பர் 3ம் தேதிகளில் 3 மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : Change in Express Rail Services

Share via