கமல்ஹாசனுடன் இணையும் மன்சூர் அலிகான்...
மன்சூர் அலிகானை ஒரு படத்திலாவது பயங்கரமான வில்லனாக நடிக்க வைத்து விடுவேன்' என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி எடுத்துள்ளார். 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தையும் எடுக்க லோகேஷ் ஆர்வமாக இருக்கிறார்.
எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மன்சூர் அலிகானின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது.
Tags :