தொடர் கன மழை காரணமாக 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 29-08-2022 10:04:31am
தொடர் கன மழை  காரணமாக 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 7129 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து 7428 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 49.75 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

கே.ஆர்.பி அணையின் 3 பிரதான மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மூன்றாவது நாளாக அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.ஆர்.பி அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ள காரணத்தால் தென்பெண்ணை ஆறு செல்ல கூடிய கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர் கன மழை  காரணமாக 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
 

Tags :

Share via