கன்னியாகுமரி வருகிறார் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்

by Editor / 06-09-2022 01:24:47pm
  கன்னியாகுமரி வருகிறார் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்

கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை தொடங்குகிறார் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதற்காக இன்று மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பிவிட்டு, காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி வருகையையொட்டி இன்று பிற்பகலில் இருந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via