குருவாயூர் கோவிலின் தலைமை அர்ச்சகராக கிரண் ஆனந்த் செப்.30-ல் பொறுப்பேற்கிறார்.

by Editor / 17-09-2022 10:45:26pm
குருவாயூர் கோவிலின் தலைமை அர்ச்சகராக கிரண் ஆனந்த் செப்.30-ல் பொறுப்பேற்கிறார்.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் இந்த ஆலயத்தின்  தலைமை அர்ச்சகர் பதியின் காலம் முடிவத்தைத்தொடர்ந்து புதிய தலைமை அர்ச்சகர் தேர்ந்த்தெடுக்கும் பமைகள் நடைபெற்றுவருகின்றன.இதன்தொடர்ச்சியாக  தலைமை அர்ச்சகர் பதவிக்கு 41 பேர் விண்ணப்பித்திருந்தனர். உச்ச பூஜைக்குப் பிறகு சீட்டு குலுக்கல் முறையில் தலைமை அர்ச்சகர் தேர்வு நடைபெற்றது.

நேர்காணலில் தகுதி பெற்ற 39 விண்ணப்பதாரர்களில் காக்கட் மனையைச் சேர்ந்த கிரண் ஆனந்த் வெற்றி பெற்றார்.வரும் அக்டோபர் 1ம் தேதி முதல்  6 மாத காலத்திற்கு கிரண் ஆனந்த்தலைமை அர்ச்சகராக பதவியில் இருப்பார்.

புதிய தலைமை அர்ச்சகர் தேர்வின் போது தந்திரி பி.சி.தினேசன் நம்பூதிரிபாடு, நிர்வாகி கே.பி.வினயன் ஆகியோர் உடனிருந்தனர்.புதிய தலைமை அர்ச்சகராக கிரண் ஆனந்த் செப்டம்பர் 30-ம் தேதி பொறுப்பேற்கிறார்.

 

Tags :

Share via