உத்தரகாண்ட் பனிச்சரிவு: 26 உடல்கள் கண்டுபிடிப்பு

by Staff / 08-10-2022 05:14:37pm
உத்தரகாண்ட் பனிச்சரிவு: 26 உடல்கள் கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் கர்வாலில் கடும் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 10 உடல்களை தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

இதன் மூலம் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 24 பேர் நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டேனிரிங் பயிற்சி பெற்றவர்கள். மற்ற இருவர் என்ஐஎம் பயிற்றுனர்கள் ஆவர். காணாமல் போன மேலும் மூன்று பயிற்சியாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குல்மார்க்கில் இருந்து நிபுணர்கள் குழு உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோசமான வானிலை மீட்பு பணிக்கு சவாலாக உள்ளது. இதற்கிடையில், பனிச்சரிவுக்குப் பிறகு முதல்முறையாக அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. திரௌபதி தண்டா 2 சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 28 மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.

திரௌபதி தண்டா சிகரம் இமயமலையின் கங்கோத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. மலையேற்ற வீரர்கள் 50-60 மீட்டர் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை சமீபத்திய காட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன. கடந்த செவ்வாய்கிழமை 17,500 அடி உயரத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via