தீபாவளி மறுநாள் விடுமுறை

by Staff / 23-10-2022 03:48:57pm
தீபாவளி மறுநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகை வருகிற 24ஆம் தேதி (நாளை) கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை வருவதால், பண்டிகை முடிந்த தினமே சொந்த ஊரில் இருந்து கிளம்ப வேண்டியது வரும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய் கிழமையும் அரசு விடுமுறை விட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், விடுமுறை அளிக்க பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அமைச்சர் பொய்யாமொழி கூறுகையில், "தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து பெற்றோர், அரசு ஊழியர்களின் கோரிக்கையை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விடுமுறை அளித்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அளிப்பதுடன் அரசு ஊழியர்களுக்கும் அளிக்கப்படும். இந்த விடுமுறையானது அத்தியாவசியமானதா, அந்த விடுமுறையை ஈடு செய்யும் தினம் உள்ளிட்டவைகள் குறித்து அலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via