சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு

by Staff / 29-10-2022 05:01:09pm
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு

சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. சர்க்கரை விலை நிலையாக இருப்பதற்காக இந்த தடையை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், சர்க்கரைக்கு பதிலாக சுவையை கூட்ட கூடிய இனிப்பூட்டிகளின் (மூலப்பொருளாக உள்ள, பதப்படுத்தப்பட்ட மற்றும் வெள்ளை நிற) ஏற்றுமதிகளுக்கு இந்த தடை கிடையாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via