122 ஆண்டுகளில்இல்லாத மிக கனமழை-பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

by Editor / 13-11-2022 09:32:13am
122 ஆண்டுகளில்இல்லாத மிக கனமழை-பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், கோயில்களுக்கும் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால், நகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 122 ஆண்டுகளில்இல்லாத மிக கனமழை சீர்காழியில் பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ஒரே நாளில் 18 சென்டிமீட்டர் மழை பெய்ததால் ஆக்கூர்,உடையார்கோவில் பகுதியில் உள்ள புத்தூர்ரோடு, சின்ன தெரு, பெரிய தெரு ஆகிய இடங்களில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தண்ணீர் வடிய வழி இல்லாததால் விளைநிலங்களில் புகுந்த வாய்க்கால் நீரானது, சாலைகளை கடந்து காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்து மறுபுறம் சென்று வருகிறது. பத்துக்கு மேற்பட்ட கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. தண்ணீர் புகுந்த வீடுகளில் தண்ணீரை இறைக்கும் காட்சிகளையும் காண முடிகிறது. இன்று மழை இல்லை என்றாலும் தண்ணீர் வடியாமல் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் மழை வெள்ள நீரில் சோப்பு போட்டு குளிக்கும் கட்சியின் வெளியாகியுள்ளது.

ஏராளமான மாவட்டங்களில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.விவசாயிகள் கண்ணீரில் தவித்துவருகின்றனர்.


 

122 ஆண்டுகளில்இல்லாத மிக கனமழை-பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
 

Tags :

Share via