கோழி பண்ணையில் கருகிய 3750 கோழி குஞ்சுகள்

by Editor / 23-11-2022 07:14:43am
கோழி பண்ணையில் கருகிய 3750 கோழி குஞ்சுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே  வேடப்பட்டி இலுப்பமரகொட்டாய் என்ற பகுதியில் மாது என்பவர் 220அடி நீளம் 22அடி அகலம்  கொண்ட இரண்டு கோழி பண்ணை அமைத்து பராமரிப்பு செய்யும் தொழில் செய்து வரும் நிலையில் ,அவரது ஒரு பண்ணையில் திடீர் மின் கசிவு ஏற்பட்டு தீ மள மள என பற்றி எரிந்து  பராமரிக்கப்பட்டு வந்த 3750 எண்ணிக்கையிலான  20 நாட்களான கோழிக்குஞ்சுகள்  மீது தீ பற்றி முற்றிலும் கருகியது.


தீ பற்றியது அடுத்து ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்தத தீ அணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பட்சத்தில் நீர் இல்லாத காரணத்தினால் பாதியில் விட்டு விட்டு  சென்றதால் கோழி பண்ணை சுமார் ஒரு மணி நேரமாக  புகைதந்த  நிலையில் காணப்பட்டது.தீ அணைப்பு துறை வாகனத்தில் நீரில்லாத காரணத்தினால் தீயணைக்கும் முயற்சி கைவிடப்பட்டு திரும்பி சென்று உள்ள நிலையில் கோழிப்பண்ணையில் இருந்த அனைத்து கோழி குஞ்சுகளும் கருகியது .

இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது மேலும் முதல் கட்ட விசாரணையில் மின் இணைப்பு பெறப்பட்ட பகுதியில் தென்னை மரத்தின் ஓலை சிக்கி இருந்ததாகவும் அதனால் தீப்பற்றி இருக்கக்கூடும் என்ற நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவம் குறித்து கல்லாவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via