சாமிஉயரத்திற்கு 250 கிலோ எடையில் 18 அடி உயரத்தில் பிரமாண்ட அரிவாள்.

by Editor / 15-01-2023 12:34:11pm
சாமிஉயரத்திற்கு 250 கிலோ எடையில் 18 அடி உயரத்தில் பிரமாண்ட அரிவாள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாசேத்தி, பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாயிகளுக்கு தேவையான கோடாரி, கதிர் அரிவாள், மண்வெட்டி வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள் மேலும் இறைச்சி வெட்ட பயன்படுத்தபடும் கத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இது தவிர ஆலயங்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு  பக்தர்களுக்காக அரிவாள் 2 அடியில் இருந்து 27அடிவரை நேர்த்திக் கடனுக்காக தயாரித்தும் கொடுத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனுக்காக மதுரை அழகர் கோவில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 250 கிலோ எடை கொண்ட 18 அடி ராட்சத அரிவாள் தயாரிப்பதற்காக திருப்புவனம் பட்டறையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அதன்படி இங்குள்ள பட்டறையில் தொழிலாளர்கள் சுமார் 20 நாட்களுக்கு மேலாக250கிலோ கொண்ட 18 அடி ராட்சத அரிவாளை  செய்து வருகின்றனர்.இது காண்போரை பிரமிக்க வைக்கும் வண்ணம் உள்ளது.

இதே போன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே கஸ்பா பழையகோட்டையில் மூடுபாறை கருப்பான சுவாமி கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் இரும்பு செம்பு கலந்த உலகத்தால் இரண்டு டன் எடையில் ஆன 18 அடி நீளம் அரிவாள்  ஈரோட்டை சேர்ந்த பக்தர்கள்  காரிக்கையாக செலுத்தியுள்ளனர். 

 

 

 

Tags :

Share via