மேலச்செவலில் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் (எ) கிட்டு சாமி உடலை   உறவினர்கள் பெற்று சென்றனர்

by Editor / 20-01-2023 09:57:20am
மேலச்செவலில் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் (எ) கிட்டு சாமி உடலை   உறவினர்கள் பெற்று சென்றனர்

நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(55). இவர் அப்பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் பராமரிப்பு பணி செய்து வந்தார். கடந்த 15ஆம் தேதி காலை வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றார். இதனைத்தொடர்ந்து மீண்டும் திரும்பி வந்தபோது கோவில் வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த கொம்பையா உட்பட பலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனை அவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவருக்கும், அங்கு மது அருந்தி கொண்டிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் கிருஷ்ணனை மது அருந்திய கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனிடையே, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கிருஷ்ணனை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்துள்ள நிலையில் கொலையுண்ட கோவில் ஊழியர் கிருஷ்ணன் (எ) கிட்டு சாமி உடலை கடந்த 5நாட்களாக வாங்க மறுத்து போராட்டம் நடத்திய நிலையில் யாதவ அமைப்பினரும், அவரது உறவினர்களும் கிருஷ்ணன் (எ) கிட்டு சாமி உடலை ஆறு தினங்களுக்கு பிறகு இன்று  உறவினர்கள் பெற்று சென்றனர்.

 

Tags :

Share via