புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்

by Staff / 25-01-2023 11:34:21am
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வலியுறுத்தி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இருந்தால் தான் தன்னால் சுயமாக பணியாற்ற முடியும், இல்லையென்றால் மன உளைச்சல் தான் மிஞ்சும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via