தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை வறண்ட வானிலை

by Editor / 19-02-2023 09:57:51am
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை  வறண்ட வானிலை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கலாம். அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via