44.56% வாக்குகள் பதிவு

by Staff / 27-02-2023 01:57:56pm
44.56% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 101,380 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர்.

 

Tags :

Share via