சீன ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியது

by Staff / 27-02-2023 03:56:58pm
சீன ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியது

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் இன்று உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கொரோனா தொற்று குறைந்துவிட்டாலும், அவ்வபோது பரவல் ஏறி, ஏறி இறங்குகிறது. கொரோனா பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் சந்தித்தனர். இந்நிலையில் சீன ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் லீக்கானதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது. கொரோன வைரஸின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

 

Tags :

Share via