தமிழக கேரளா எல்லையில் கனிமவள ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு.

by Editor / 15-03-2023 09:58:27am
தமிழக கேரளா எல்லையில் கனிமவள ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் கேரள மாநிலத்திற்கு அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நூற்றுக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் ஏராளமான லாரிகள்புளியரைப்பகுதியில்   அணிவகுத்து நின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி முதல் கேரள மாநிலத்திற்கு கனிமவள லாரிகள் செல்வதற்கு வழக்கம் போல காவல்துறை சோதனைச் சாவடியில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை ஏராளமான லாரிகள் கேரள மாநிலம் நோக்கி கனிம வளங்களை ஏற்றி சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் எஸ்.வளைவு பகுதியில் ஒரு லாரி ஒன்று பழுதாகி நிற்கவே திடீரென போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எஸ்.வளைவு பகுதியில் இருந்து புளியரை வரை நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அணிவகுத்துநின்றன. இதன் காரணமாக கேரள மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக புளியரை  போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணி ஈடுபட்டனர். இருப்பினும் போக்குவரத்து சீர் செய்யப்படாமல் இருந்து வந்தது தொடர்ச்சியாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது அதன் காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 

Tags :

Share via