அமெரிக்க விசா கட்டணம் உயர்வு

by Staff / 12-04-2023 01:03:17pm
அமெரிக்க விசா கட்டணம் உயர்வு

அமெரிக்கா தனது நாட்டின் விசா கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது 8 வகையான விசாக்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசா B1/B2 கட்டணங்களும் இவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. B1/B2 விசாக்கள் 25 டாலராகவும், H, L, O, P, Q, R விசாக்கள் 15 டாலராகவும், E விசாக்கள் 110 டாலராகவும் அதிகரித்துள்ளது. விசா தொடர்பான 10 லட்சம் விண்ணப்பங்களை ஆய்வு செய்ய இலக்கு வைத்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via