சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ஏப்ரல் 17 முதல் பக்தர்களுக்கு அனுமதி.

by Editor / 16-04-2023 09:28:28am
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ஏப்ரல் 17 முதல் பக்தர்களுக்கு அனுமதி.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் ஏப். 20 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு தினமும் காலை 7:00மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாது  உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை  வனத்துறை விதித்துள்ளனர்.

 

Tags : சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

Share via