101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்!

by Staff / 21-04-2023 02:32:35pm
101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்!

கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார். இதில், தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.
 
காவல்துறை, தீயணைப்பு துறைக்காக சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.
ஆண்டுதோறும் காவல்துறையினருக்கு சீருடைப்படி ரூ. 4, 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ. 30, 000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஆவடி, தாம்பரம் காவல்நிலையங்களில் காவலர்களுக்கு நாள்தோறும் உன்படி ரூ. 300 வழங்கப்படும்.

சென்னை புறநகரில் புதிதாக 3 பெருநகர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுக்கா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
வானகரம், மேடவாக்கம், ஆவடி மற்றும் புதூர் ஆகிய இடங்களில் புதிய காவல்நிலைய்யங்கள் அமைக்கப்படும்.காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.தாம்பரம் மாநகர் உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 10. 15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்.குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவி வாங்கப்படும்.க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னையில் 3, 000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
காவலர் மருத்துவமனை வசதி ஊர்க்காவல் படையினருக்கும் விரிவு படுத்தப்படும்.
பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சமூக வலைதளங்களில் சட்டம் - ஒழுங்கு குறித்து பரப்பப்படும் தகவல்களை உடனுக்குடன் திரட்டி மேல்நடவடிக்கை எடுக்க, சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவு உருவாக்கப்படும்.
தடை அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படும்.கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம் வட்டார தடை அறிவியல் ஆய்வகங்களில் போதை மருந்து ஆய்வு பிரிவுகள் அமைக்கப்படும் உள்ளிட்ட 101 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via