ரஜினிகாந்துக்கு ஒன்றும் தெரியாது- அமைச்சர் ரோஜா

by Staff / 30-04-2023 05:24:30pm
ரஜினிகாந்துக்கு ஒன்றும் தெரியாது- அமைச்சர் ரோஜா

மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்டிஆரின் 100வது பிறந்தநாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா எதிர்ப்பு தெரிவித்தார். விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியது, அவரை பாராட்டியது ரோஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடுவை அரசியலில் தீர்க்கதரிசி என்று ரஜினியின் புகழாரம் சூட்டினார். இந்த நிலையில், ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, தெலுங்கு மாநில அரசியல் குறித்து ரஜினிக்கு தெளிவான புரிதல் இல்லை என்று விமர்சித்தார்.

 

Tags :

Share via