மும்பையில் ரூ.16.5 கோடிக்கு வீடு வாங்கிய கஜோல்

by Staff / 05-05-2023 02:46:24pm
மும்பையில் ரூ.16.5 கோடிக்கு வீடு வாங்கிய கஜோல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அனைவருக்கும் மும்பையில் வீடுகள் உள்ளன. அதனால் மும்பையில் பிரபலங்கள் சொகுசு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதாக செய்திகள் வருவது வழக்கம். ஜூஹு மற்றும் பாந்த்ரா ஆகிய இடங்கள் பிரபலங்களின் வீடுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இப்போது பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான கஜோல், அஜய் தேவ்கன் ஜூஹூவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளனர். அவர்கள் தங்களுடைய புதிய வீட்டை ரூ.16.5 கோடிக்கு வாங்கினர். முத்திரைத் தொகையாக 99 லட்சம் ரூபாயையும் செலுத்தியுள்ளனர். நடிகை என்பதைத் தவிர ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் கஜோல் ஆர்வம் காட்டுகிறார்.

 

Tags :

Share via