பெண்ணின் மீது மோதி இழுத்துச் சென்ற கார்

by Staff / 13-05-2023 01:00:14pm
பெண்ணின் மீது  மோதி இழுத்துச் சென்ற கார்

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் பயங்கர சாலை விபத்து நடந்தது. ஸ்கூட்டியில் சென்ற பெண் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் அந்த பெண்ணை மோதி சிறிது தூரம் இழுத்து சென்று கீழே தள்ளியது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணை மோதிவிட்டு கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via

More stories