மூத்த நீதிபதியாக உள்ள எஸ் வைத்தியநாதன் நாளை முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம்

by Admin / 24-05-2023 12:16:44pm
 மூத்த நீதிபதியாக உள்ள எஸ் வைத்தியநாதன் நாளை முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து  மூத்த நீதிபதியாக உள்ள எஸ் வைத்தியநாதன் நாளை முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .இதற்கான உத்தரவை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி உத்தரவிட்டுள்ளார் .

ஆகஸ்ட் 17, 1962 அன்று கோவையில் பிறந்தார். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், பட்டப்படிப்பை பி.ஏ. (பொருளாதாரம்) 1979-82 இல் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி,.  பி.எல். 1982-85ல் சென்னை சட்டக் கல்லூரில் (இப்போது டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது) மற்றும் 1986 இல் தனிநபர் மேலாண்மை, தொழிலாளர் நலன் மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுகலை டிப்ளமோ. அவர் ஆகஸ்ட் 27, 1986 இல் வழக்கறிஞராகச் சேர்ந்தார்.. . 25.10.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 14.04.2015 அன்று இந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார்.

 

Tags :

Share via