ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.2 லட்சம்: மோசடி செய்து தப்பியோடிய பெண்

by Editor / 18-07-2021 07:40:03pm
ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.2 லட்சம்: மோசடி செய்து தப்பியோடிய பெண்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், பச்சப்பட்டி பெரியதெரு பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அட்சயம் கோல்டு பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், சேலம் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இதில், ஒரு லட்சம் ரூபாய் கட்டினால், அடுத்த வருடத்தில் இரட்டிப்பு செய்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த அலுவலகத்தை பூட்டி விட்டு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வெளியூருக்கு தப்பியோடி விட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வெளியூர் ஆட்கள் சுமார் 50 பேர் சேர்ந்து, நெய்வேலியில் உள்ள பி.டி.ஆர்.ராஜன் தெருவில் குடியிருந்த புஷ்பாவை பிடித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரித்த போலீசார், சம்பவம் நடந்தது சேலம் மாநகரம் என்பதால், பொருளாதார குற்றப்பிரிவில் புஷ்பாவை ஒப்படைத்தனர். புஷ்பா மீது மாநகர குற்றப் பிரிவில் புகார் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

 

Tags :

Share via