கமல்ஹாசனுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு. 

by Editor / 28-06-2023 10:53:14pm
கமல்ஹாசனுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு.  நாளை ஜூன்29 ஆம் தேதி ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இது தொடர்பாக ‘மாமன்னன்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை தெரிவிக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு. 
 

Tags :

Share via