ரயில்வே கேட் ரோப் அறுந்ததால் கேட்டை திறக்க முடியாமல் தவித்த ஊழியர்

by Editor / 14-07-2023 11:03:57pm
ரயில்வே கேட் ரோப் அறுந்ததால் கேட்டை திறக்க முடியாமல் தவித்த ஊழியர்

தென்காசி மாவட்டம்  செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இந்த பாதை வழியாக செங்கோட்டையிலிருந்து மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட்டை தாண்டி தான் கடையநல்லூர் பண்பொழி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் முக்கியமான பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது. தினமும் சுமார் 30 முறைக்கு மேலாக ரயில் நிலையத்தின் கேட் மூடி திறக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 4:00 மணி அளவில் ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. திறக்க முடியாமல் அந்த ரோப் அறுந்தது இதன் தொடர்ச்சியாக பள்ளி மற்றும் அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்வோர், வாகனங்கள் அங்கு ஆங்காங்கே குவியத் தொடங்கியது. மேலும் ரயில்வே கேட் திறக்க முடியாமல் கேட் கீப்பர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.இதன் தொடர்ச்சியாக உடனடியாக ரயில்வே பொறியியல் பிரிவுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் விரைந்து வந்து அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனங்கள் மாற்று பாதையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி திருப்பிடப்பட்டன. அரசு பேருந்துகள் பள்ளி வாகனங்கள் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் ரயில் நிலையத்திற்கு முன்பதி செய்து ரயிலில் பயணிக்க வரும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.தினமும் 30 40 முறை மூடி திறக்கப்படும் ரயில்வே கேட் பராமரிப்பு சீராக இல்லாததின் காரணமாகவே அதன் ரோப் கம்பி அருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதனை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு மணி நேரமாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via