அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

by Editor / 22-07-2021 08:25:12am
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்.. இவர் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். கரூர் மற்றும் சென்னையில் உள்ள 21 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லம், அவரின் உறவினர் இல்லம், அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதில் பல்வேறு ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கர் தற்போது சென்னையில் உள்ளதால், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திலும் ரெய்டு நடந்து வருகிறது.. அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via